அமிர்த தாரை – த்யானயோகி ஒம்தாஸ்ஜியின் உபதேசங்கள்

அமிர்த  தாரை – த்யானயோகி ஒம்தாஸ்ஜியின் உபதேசங்கள்

வெள்ளி, 12 ஜூலை, 2013

நற்குணங்களும் மனத்தூய்மையும்

 இந்த உலகமென்னும் மேடையில் பல்லாயிரக்கணக்கானோர் தங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள பாத்திரங்களை சிறந்த முறையில் நிர்வகித்து வருகின்றனர் .அதாவது கணவன் -மனைவி ,தாய் -தந்தை ,மகன்-மகள்  முதலாளி -தொழிலாளி ,சமூக சேவகர்  மற்றும் இன்னும் எத்தனையோ உறவுகள் அவரவர் தம்முடைய கடமையை சிறப்பாகச் செய்து வருகின்றனர் . இவர்கள் நல்ல மனிதர்கள் என்று குறிப்பிடப் படுகின்றனர்.இவர்கள் சமுதாயத்தின் , குடும்பத்தின்  தூண்களாகக் கருதப் படுகின்றனர் 
இந்த நல்ல மனிதர்கள் ,ஆன்மீகப் வழியில் தங்களை உயர்த்திக் கொள்ள விரும்பினால் ,தினசரி வாழ்வில் ,மற்றும் சில கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும் .

நல்ல மனிதன் - தூய மனிதன் - இந்த வார்த்தைகளின் உபயோகம் உலகியல் மற்றும் ஆன்மிகம் ,இரண்டிலும் வேறு வேறாக மாறுபட்டுக் காணக் கிடைக்கிறது .  அன்றாட வாழ்வில் நம் பேச்சில் நல்லவர் என்ற வார்த்தையைப்  அதிகமாக உபயோகிக்கிறோம் .

உதாரணத்திற்கு ஒரு நல்ல தாய் ,ஒரு நல்ல தகப்பன் ,ஒரு நல்ல ஆசிரியர் ,ஒரு நல்ல தொழிலாளி ,ஒரு நல்ல சமூக சேவகர் இவர்கள் தங்கள் கடமைகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்பவர்களாக இருப்பார்கள் .
தங்கள் சக்திக்கும் மீறிய நல்ல செயல்களில் ஈடுபடுபவர்களாக ,மனித சமுதாயத்தின் உயர்வுக்குப் பாடுபடுபவர்களாக ,ஏழைகளுக்கு உதவி செய்பவர்களாக ,இரவு பகல் பாராமல் சமூக சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்களாக இருக்கலாம் . ஆன்மீக நோக்கில் பார்த்தோமானால் ,இவைகளெல்லாம் நல்ல செயல்கள் என்றே கூறலாம் .ஆனால் தூய செயல்கள் என்று வகைப் படுத்த இயலாது . 

இறைவனின் பெயரைச் சொல்வதினால் ,அதாவது இறைவனின் நாமத்தை அல்லது இறை மந்திரத்தை ஜபம் செய்வதினால் மட்டுமே  ஒரு மனிதன் தூய்மை அடைகிறான். அப்படி நாம ஜபம் செய்யும் பொழுது ,அந்தப் பவித்ரமான நாமத்தின் தூய்மைப்படுத்தும் சக்தியானது உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஆன்மீக அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும் . இந்த அதிர்வுகள் உடலின் ,மனதின் ,உணர்வுகளின் உள்ளே ஊடுருவி வியாபிக்க  வேண்டும். இந்த நிலையில் ஒருவர் முழுமையாகத் தூய்மை அடைகிறார் 
.அதோடு தியானத்தோடு கூடிய மந்திர ஜபம் ஆத்ம சுத்திக்கு பெரிதும் உறுதுணையாய் இருக்கும்..

எனவே ராம நாமத்தை  இடைவிடாமல் இரவு பகல் எந்நேரமும் ஸ்மரணை செய்யுங்கள்.

நல்ல மனிதர் என்ற பெயரோடு மனத் தூய்மை மற்றும் ஆத்ம சுத்தியும் அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல் படுங்கள் .

With thanks for translation to Mrs Meena Ram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக