அமிர்த தாரை – த்யானயோகி ஒம்தாஸ்ஜியின் உபதேசங்கள்

அமிர்த  தாரை – த்யானயோகி ஒம்தாஸ்ஜியின் உபதேசங்கள்

புதன், 10 ஜூலை, 2013

தாரக மந்திரம் - ராம நாமம்

ராம மந்திரம் தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது . சம்ஸ்கிருதத்தில் தாரகை என்றால் நட்சத்திரம் என்று அர்த்தம்.   விண்வெளியில் ஒளி வீசி பிரகாசிக்கும் நட்சத்திரமானது எப்படி திசை தெரியாமல் கடலிலோ வெட்டவெளியிலோ பயணம் செய்யும் ஒரு பிரயாணிக்கு வெளிச்சம் தந்து சரியான வழியைக் காட்டுகிறதோ அதே போல்  இந்த ராம நாமம் என்ற தாரக மந்திரம் நம்மை பிறவிப் பிணியிலிருந்து விடுவித்து முக்தியைக் கொடுக்கும் சக்தி உடையது ஆகும் .

இந்த உலக வாழ்க்கை என்னும் கடலைக் கடப்பது என்பது எளிதான ஒன்று அல்ல.  ஆனால்,  இதற்கு சுலபமான வழி ஒன்று உள்ளது .
ஆம் ! சித்த புருஷரான ஒரு சிறந்த குருவாலும் அவர் உபதேசிக்கும் மந்திரத்தாலும் மிக எளிதாக இந்த பவ சாகரத்தைக் கடக்க முடியும்.  குருவருள் படகாகவும் ,மந்திரம் துடுப்பாகவும் துணை நின்று  நம் வாழ்க்கை சரியான பாதையில் சரியான திசையில்  வெகு எளிதாகச் செல்ல உதவும் .இது சத்தியம் .  

எனவே  இடைவிடாது இந்த ராம நாமத்தை ஜபம் செய்யுங்கள் :"சீதாராம் "

With thanks for translation to Mrs Meena Ram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக