அமிர்த தாரை – த்யானயோகி ஒம்தாஸ்ஜியின் உபதேசங்கள்

அமிர்த  தாரை – த்யானயோகி ஒம்தாஸ்ஜியின் உபதேசங்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

ரோஜாச் செடியும் ராம நாமத்தின் நறுமணமும்

 ஒரு ரோஜா மலர் தன்னுடைய மென்மையான அழகாலும் அதிலிருந்து வீசும் நறுமணத்தாலும் நம்மை அதனிடம் ஈர்க்கிறது . ஆனால் நாம் ரோஜா மலரின் அருகில் செல்லும் போது அதில் உள்ள முட்களிடம் கவனமாக இருக்க வேண்டும் .முட்கள் இல்லாத ரோஜா செடியே கிடையாது அல்லவா !  
நம்முடைய உடலை முட்கள் நிரம்பிய  ரோஜா செடிக்கு ஒப்பிட்டுச் சொல்லலாம் இதில்  காமம் ,குரோதம் ,மோஹம் ,பொறாமை ,பேராசை ,கர்வம் ,நான்  எனது என்கிற அஹம்காரம் ஆகிய  கூரிய முட்கள் வளர்ந்து நம்மை நெருங்குபவர்களைக்  குத்திக் கிழிக்கின்றன .  

ஆயிரம் இதழ்கள் உடைய  தாமரை மலரை கொண்டிருக்கும்  நம்முடைய சஹஸ்ராரம்  எனும் உச்சந்தலை ஒரு ரோஜாவைப் போன்றது. .நாம்  எப்பொழுது இறைவனிடத்தில் அத்யந்த பக்தியும்  அன்பும் 

செலுத்துகிறோமோ அப்பொழுது  இந்த சஹஸ்ராரம் மலர்ந்து நறுமணம் பரப்பி மிகுந்த  பொலிவுடன்  தோற்றமளிக்கும் .  

அதனால் ஒரு மனிதன்  அற்புதமான பயனை அடைகிறான்  .அவனுள்ளிருக்கும் இறை  பக்தியானது மேலே குறிப்பிட்ட முட்கள் அனைத்தையம் மழுங்கச் செய்து விடுவதால் ,அவனிடம் வருவதற்கு யாரும் தயங்க மாட்டார்கள் . மாறாக மகிழ்ச்சியே அடைவார்கள் .

ரோஜா மலர் மலரும்பொழுது எப்படி அழகுடனும் நறுமணத்துடனும் காட்சியளிக்கிறதோ அதே போல் நம்முள் இறைவன் பால் பக்தி மலரும் பொழுது அந்த பக்தியின் காந்தியும் நல் வாசனையும் ,இறைவனின் அருளும் நம்மை அந்தப் பரம் பொருளின் வசம் ஈர்க்கின்றன . அப்பொழுது நாம் நம்முள் இருக்கும் முட்களாகிய எதிர்மறை எண்ணங்கயும் ,குணங்களையும் இறைவனின் அன்பையும் அருளையும் தேடும் பாதையில் செலுத்தி ஆனந்தமாக வாழ முடியும்.  

ஒருவருடைய வாழ்க்கையில் இப்படி நறுமணம் வீச விரும்பினால் இதோ ஒரு சுலபான வழி உள்ளது . இடைவிடாது  ,முறையாக "ராம நாம"  ஜபம் செய்யுங்கள் .உங்களிடமிருந்து வீசும் தூய பக்தியின் நறுமணத்தால் இறைவன் உங்கள் வசமாவான் .

                                 சீதாராம் !

With thanks for translation to Mrs Meena Ram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக