அமிர்த தாரை – த்யானயோகி ஒம்தாஸ்ஜியின் உபதேசங்கள்

அமிர்த  தாரை – த்யானயோகி ஒம்தாஸ்ஜியின் உபதேசங்கள்

செவ்வாய், 9 ஜூலை, 2013

ஓம் கணேசாய நமஹா :


என்னுடைய இந்த  வலைபதிவுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.  எல்லாம் வல்ல இறைவன் மீது தணியாத தாகமும், இடைவிடாத தேடலும் கொண்டு வாழ்வில் அன்பும்,சாந்தியும் பெற விரும்பும்  அனைவரும் என்னோடு இந்த அருமையான புனிதமான பயணத்தில் இணைந்து பயன் பெற வேண்டுகிறேன் . 

இந்தப் ஆன்மீகப்  பயணத்தைத் துவங்கு முன்பு நம்முடைய  இந்த முயற்சி வெற்றி பெற நல்லாசிகள்  வேண்டி  முழு முதல் கடவுளாகிய ஸ்ரீ விநாயகப் பெருமானைத் தொழுது வணங்குவோம் .  எந்த ஒரு வேலையையும் தொடங்கும் முன்பு விநாயகப் பெருமானை மனதில் நினைத்து அவரிடம்  பிரார்த்தனை செய்யுங்கள் .நம் உடலில் மூலாதார சக்ரத்தில் அந்த விநாயகர் சூட்சுமமாக விளங்குகிறார் .  அந்த இறைவனை உங்களுக்குள் தேடுங்கள் . நீங்கள் செய்யும் செயல்களில் ஏற்படும் தடைகளையும் இடையூறுகளையும் அழிக்கும் அந்த இறைவன் விக்னங்களைப் நீக்கும் விக்னேஸ்வரன் ஆவார் .

அவரே பிரணவம் ! அவரே ஓம்காரம் !! அவரே மெய்ஞ்ஞானத்தின் உச்சம் !!!  அப்படிப்பட்ட அவருடைய கருணையால் நீங்கள் தேடும் ஞானம் உங்களுக்கு நிச்சயமாகக்  கிடைக்கும்.

நம் அனைவருக்கும்  சக்தியையும்  ஆற்றலையும் வழங்க வல்ல ரித்தி ,சித்தி என்ற இரு தேவதைகள், விநாயகருக்குத் தொண்டு செய்பவர்களாக விளங்குகின்றனர். இந்த தேவதைகள் ,விநாயகப் பெருமானை  மனமாற வழிபடுவோருக்கு ஆன்மீக சக்தியை வழங்கி அவர்கள் இந்த உலகியல் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகின்றனர்.

With thanks for translation to Mrs Meena Ram